முக்கிய பங்கு

மாஜிஸ்திரேட் இல்லாத நிலையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை கவனிப்பதற்கு சமாதான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற நீதவான் நீதிபதி பெஞ்சிற்கு தலைமை தாங்க அதிகாரம் உள்ளார்.

தகைமைகள்

15 வருட அனுபவமுள்ள சட்டத்தரணியாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நடைமுறை

சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடனும் பரிந்துரைகளுடனும் பெயர்ப்பட்டியலில் சேர்க்கப்பட்ட சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியுடனும் 'செயலாளர், நீதி அமைச்சு, கொழும்பு 12' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்  அல்லது  குறித்த பிரிவில் ஒப்படைக்க முடியும்.

விண்ணப்ப படிவங்களைப் பெறுதல்

விண்ணப்பங்களை அமைச்சில் அவ்விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்ப படிவங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம்

கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

விண்ணப்பங்களைப் பதிவுத்தபால் மூலம் அனுப்பலாம் அல்லது நீதி அமைச்சின் குறித்த பிரிவில் வழமையான அலுவலக நேரத்தில் ஒப்படைக்கலாம்.

சேவைக் கட்டணம்

இச் சேவைக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

சேவை வழங்குவதற்கான காலம்

ஏறக்குறைய இரண்டு வாரங்கள்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சான்றிதழின் சான்றுப்பபடுத்தப்பட்ட பிரதி.
  2. உத்தியோகபூர்மற்ற நீதவான் பதவிக்காக அமைச்சிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து உரிய பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விடயத்திற்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பெயர், பதவி தொலைபேசி

ஈமெயில்/தொலைநகல்

பணிப்பாளர் (மறுசீரமைப்பு )

+94 112 446 171 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மாதிரி விண்ணப்ப படிவம்

இணைப்பு -1 இல் மாதிரி விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அறிவிப்பு