தொலை நோக்கு

சிறைக் கைதிகளுக்கு புனர் வாழ்வளித்து சிறந்த பிரசைகளாகச் சமூகமயப்படுத்தல்

பணிக்கூற்று

பாதுகாப்பு, பராமரிப்பு, புனர்வாழ்வு ஆகிய முக்கிய இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அலுவலர்களுக்கிடையே சிறந்த தொடர்பொன்றை ஏற்படுத்தி நேர்க் கணிய சிந்தனையைக் கட்டியெழுப்பி அலுவலர்களின் தொழில் திருப்தியை அதிகரிப்பதன் ஊடாகவும் மற்றும் சிறைக் கைதிகளின் நலன்புரி அலுவல்களை விதிமுறைப்படுத்துவதன் ஊடாகவும் அவர்களின் உழைப்பை நாட்டின் அபிவிருத்திக்குப் பயனுள்ள விதத்தில்; பயன்படுத்துதல்

குறியிலக்குகள்

  • சிறைக் கைதிகளை முறையாகப் புனர்வாழ்வளிப்பதன் மூலம் சட்டத்தை மதிக்கும் மனித நேயமுடைய நபர்களாக மாற்றி சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு பங்களிப்புச்; செய்தல்.
  • சிறைச்சாலை அலுவலர்களை ஊக்குவித்தல் மற்றும் திணைக்களக் குழு உணர்வைக் கட்டியெழுப்புதல

நிறுவனத்தின் முன்னுரிமைப் பணிகள்

  • நாட்டினுள் ஏதேனும் நீதிமன்றமொன்றின் அதிகாரத்தின் கீழ் சிறைப்படுத்தப்படுகின்ற அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்ட சகல தராதரங்களையும் கொண்ட கைதிகளை பெறுப்பேற்று சிறைச்சாலைத் சட்ட திட்டங்களுக்கு இசைவானதாக அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றை வழங்குதல் மற்றும் நீதி மன்றங்களுக்கு வியக்கமறியல் கைதிகளை ஆஜர்படுத்தல்.
  • அனைத்து சிறைச்சாலைகளின் சிறைக் கூடங்கள் மற்றும் நன்நடத்தை சீர்திருத்த நிலையங்கள் தொடர்பான பொதுவான ஏற்பாடுகள் மற்றும் சிறப்பான நிருவாகத்தை வழங்குதல்.
  • அனைத்து சிறைச்சாலைகளின் சிறைக் கூடங்கள் மற்றும் நன்நடத்தை சீர்திருத்த நிலையங்களின் கைதிகளுக்கு தொழிநுட்ப, விவசாய,விலங்குப் பராமரிப்பு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குதல்.
  • அனைத்து சிறைச்சாலைகளின் சிறைக் கூடங்கள் மற்றும் நன்நடத்தை சீர்திருத்த நிலையங்களிற்கான நலனோம்பல் வசதிகளை வழஙகுதல்.
  • சீர்திருத்த துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் ஒழுங்கு விதிகளை தயாரித்தல்.
  • காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் சிறைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வளித்து சிறந்த பிரசைகளாக வெளியேற்றுவதற்குத் தேவையான சமூகப் பின்னணியை உருவாக்குதல்
  • சிறைச்சாலைகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் போது ஏற்படக் கூடிய சிறைச்சாலை இட நெருக்கடியைக் குறைத்தல். புதிய தொழிநுட்பத்தை அறிமுகம் செய்தல். பௌதீக வளங்களை மேம்படுத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல்.
  • சேவைப் பிரிவுக்குரிய பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதனூடாக சிறந்த மாற்றத்தையும் மற்றும் சேவைத் திருப்தியையும் கொண்ட அலுவலர்களை உருவாக்குவதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மனித வளங்களை விருத்தி செய்தல
  • சிறைக் கைதிகள் நிருவாக அலுவல்களை மிகவும் முறையாகவும் மற்றும் விணைத்திறன் கொண்டதாகவும் ஆற்றிக் கொள்வதற்காகச் சிறைக் கைதிகளின் தகவல் முகாமைத்துவத் முறைமையை தாபித்து அதனை நடைமுறைப்படுத்தல்

தொடர்பு விபரங்கள்

சிறைச்சாலைகள் தலைமையகம்,
இல 150, பேஸ்லைன் வீதி,
கொழும்பு 09,
இலங்கை.

+94 114 677 177
+94 114 677 180
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.