இந்த அமைச்சு நீதி, பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு 27.09.2024 ஆம் திகதிய மற்றும் 2403/53 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் நிறுவப்பட்டது, மேலும் 25.11.2024 ஆம் திகதிய மற்றும் 2412/08 ஆம் இலக்க என்ற அதிவிஷேட வர்த்தமானி மூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீண்டும் நிறுவப்பட்டது. அதன்படி, பின்வரும் நிறுவனங்களும் திணைக்களங்களும் இந்த அமைச்சின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் தொடர்பான அனைத்து நிறுவன மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு பணிகள் இந்தப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது. குறித்த நிறுவனங்கள் பின்வருமாறு.
1. சட்டமா அதிபர் திணைக்களம்
2. சட்டவரைஞர் திணைக்களம்
3. நீதிச்சேவை ஆணைக்குழு
4. உயர் நீதிமன்றம்
5. அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்
6. சிறைச்சாலைகள் திணைக்களம்
7. சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களம்
8. அரசகரும மொழிகள் திணைக்களம்
9. கடன் இணக்க சபை திணைக்களம்
10. சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்
11. தொழில் நியாயசபைகள் செயலாளர் அலுவலகம்
12. இலங்கை நீதிபதிகள் நிறுவனம்
13. சட்ட உதவி ஆணைக்குழு
14. குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை
15. இழப்பீட்டுக்கான அலுவலகம்
16. காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்
17. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம்
18. மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி முகாமைச்சபை
19. அரசகரும மொழிகள் ஆணைக்குழு
20. தேசிய மொழிகள் பயிற்சி நிறுவனம்
21. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு
22. சட்டக் கல்விப் பேரவை
பிரிவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்
அமைச்சின் நிறுவன மற்றும் நிர்வாக நடவடிக்கைகள், அமைச்சிற்குச் சொந்தமான மேற்கூறிய அனைத்து நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், நீதிமன்றங்களில் திட்டமிடப்படாத பதவிகளுடன் தொடர்புடைய நிறுவன நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றங்களின் நிர்வாக மற்றும் நிறுவன விவகாரங்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குதல் ஆகிய முக்கியப் பொறுப்புகள் நிர்வாகப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.






