“Creating a Citizen free of wrongdoing ………. ”
Development of social, economic, spiritual and Psychological spheres of minor offenders and their families by implementing a productive community corrections process with the necessary follow up
Objective
- Implementation of the Community Based Amendment Act No. 46 of 1999.
- Reducing the incarceration of minor offenders and reducing the cost of congestion and government spending.
- Development of community correctional persons psychologically, spiritually, socially and economically and their families socially and spiritually.
Visit official web site of the Department of Community Based Corrections
சிறைக் கைதிகளுக்கு புனர் வாழ்வளித்து சிறந்த பிரசைகளாகச் சமூகமயப்படுத்தல்
பாதுகாப்பு, பராமரிப்பு, புனர்வாழ்வு ஆகிய முக்கிய இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அலுவலர்களுக்கிடையே சிறந்த தொடர்பொன்றை ஏற்படுத்தி நேர்க் கணிய சிந்தனையைக் கட்டியெழுப்பி அலுவலர்களின் தொழில் திருப்தியை அதிகரிப்பதன் ஊடாகவும் மற்றும் சிறைக் கைதிகளின் நலன்புரி அலுவல்களை விதிமுறைப்படுத்துவதன் ஊடாகவும் அவர்களின் உழைப்பை நாட்டின் அபிவிருத்திக்குப் பயனுள்ள விதத்தில்; பயன்படுத்துதல்
பணிக்கூற்று
பாதுகாப்பு, பராமரிப்பு, புனர்வாழ்வு ஆகிய முக்கிய இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அலுவலர்களுக்கிடையே சிறந்த தொடர்பொன்றை ஏற்படுத்தி நேர்க் கணிய சிந்தனையைக் கட்டியெழுப்பி அலுவலர்களின் தொழில் திருப்தியை அதிகரிப்பதன் ஊடாகவும் மற்றும் சிறைக் கைதிகளின் நலன்புரி அலுவல்களை விதிமுறைப்படுத்துவதன் ஊடாகவும் அவர்களின் உழைப்பை நாட்டின் அபிவிருத்திக்குப் பயனுள்ள விதத்தில்; பயன்படுத்துதல்
குறியிலக்குகள்
- சிறைக் கைதிகளை முறையாகப் புனர்வாழ்வளிப்பதன் மூலம் சட்டத்தை மதிக்கும் மனித நேயமுடைய நபர்களாக மாற்றி சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு பங்களிப்புச்; செய்தல்.
- சிறைச்சாலை அலுவலர்களை ஊக்குவித்தல் மற்றும் திணைக்களக் குழு உணர்வைக் கட்டியெழுப்புதல
நிறுவனத்தின் முன்னுரிமைப் பணிகள்
- நாட்டினுள் ஏதேனும் நீதிமன்றமொன்றின் அதிகாரத்தின் கீழ் சிறைப்படுத்தப்படுகின்ற அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்ட சகல தராதரங்களையும் கொண்ட கைதிகளை பெறுப்பேற்று சிறைச்சாலைத் சட்ட திட்டங்களுக்கு இசைவானதாக அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றை வழங்குதல் மற்றும் நீதி மன்றங்களுக்கு வியக்கமறியல் கைதிகளை ஆஜர்படுத்தல்.
- அனைத்து சிறைச்சாலைகளின் சிறைக் கூடங்கள் மற்றும் நன்நடத்தை சீர்திருத்த நிலையங்கள் தொடர்பான பொதுவான ஏற்பாடுகள் மற்றும் சிறப்பான நிருவாகத்தை வழங்குதல்.
- அனைத்து சிறைச்சாலைகளின் சிறைக் கூடங்கள் மற்றும் நன்நடத்தை சீர்திருத்த நிலையங்களின் கைதிகளுக்கு தொழிநுட்ப, விவசாய,விலங்குப் பராமரிப்பு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குதல்.
- அனைத்து சிறைச்சாலைகளின் சிறைக் கூடங்கள் மற்றும் நன்நடத்தை சீர்திருத்த நிலையங்களிற்கான நலனோம்பல் வசதிகளை வழஙகுதல்.
- சீர்திருத்த துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் ஒழுங்கு விதிகளை தயாரித்தல்.
- காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் சிறைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வளித்து சிறந்த பிரசைகளாக வெளியேற்றுவதற்குத் தேவையான சமூகப் பின்னணியை உருவாக்குதல்
- சிறைச்சாலைகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் போது ஏற்படக் கூடிய சிறைச்சாலை இட நெருக்கடியைக் குறைத்தல். புதிய தொழிநுட்பத்தை அறிமுகம் செய்தல். பௌதீக வளங்களை மேம்படுத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல்.
- சேவைப் பிரிவுக்குரிய பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதனூடாக சிறந்த மாற்றத்தையும் மற்றும் சேவைத் திருப்தியையும் கொண்ட அலுவலர்களை உருவாக்குவதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மனித வளங்களை விருத்தி செய்தல
- சிறைக் கைதிகள் நிருவாக அலுவல்களை மிகவும் முறையாகவும் மற்றும் விணைத்திறன் கொண்டதாகவும் ஆற்றிக் கொள்வதற்காகச் சிறைக் கைதிகளின் தகவல் முகாமைத்துவத் முறைமையை தாபித்து அதனை நடைமுறைப்படுத்தல்
தொடர்பு விபரங்கள்
சிறைச்சாலைகள் தலைமையகம்,
இல 150, பேஸ்லைன் வீதி,
கொழும்பு 09,
இலங்கை.
+94 114 677 177
+94 114 677 180
1969ம் ஆண்டின் 03ம்இலக்க இலங்கை சட்டஆணைக்குழு சட்டத்தின் மூலம் இலங்கை சட்ட ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. இது சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பிரதான அரசாங்க நிறுவனமாகும். சட்ட ஆணைக்குழு திணைக்களத்தின் பிரதான பணி தேவையான நிருவாக மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்குவதாகும்.
நோக்கு
நல்லாட்சிக்காக சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்தல்.
செயற்பணிகள்
சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுச் சட்டத்தால் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட மற்றும் விதிக்கப்பட்ட பணிகளை அமுல்படுத்தல்.
நோக்கமும் தொழிற்பாடுகளும்
சட்ட ஆணைக்குழுவின் பிரதான நோக்கம் சட்ட மறுசீரமைப்பை விருத்திசெய்வதாகும். அதற்காக சட்டஆணைக்குழு பின்வரும் பணிகளை ஆற்றுகிறது.
- சட்டத்தை குறியீடு செய்தல்.
- முரண்பாடுகளை ஒழித்தல்.
- சட்டத்தை முறையாக அபிவிருத்தி செய்து மறுசீரமைப்பதற்காக பொருள் அளவிலானதும் நடவடிக்கைமுறை சார்ந்ததுமான சட்டத்தை மீளாய்வு செய்தல்.
- வழக்கொழிந்த மற்றும் அனாவசியமான சட்டங்களை அகற்றுதல்.
- சட்டத்தை எளிதாக்குதலும் நவீனமயப்படுத்தலும்.
- சட்டத்தை மறுசீரமைப்பதற்காக எவ்வாறான பிரேரணைகளையும் பெற்று பரிசீலித்தல்.
- மறுசீரமைப்பதற்காக காலத்திற்குகாலம் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளை ஆராய்வு செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்து அமைச்சருக்கு வழங்குதல்.
- ஏனைய நாடுகளின் சட்டமுறை சம்பந்தமான தகவல்களை பெறல்.
- துணைச் சட்டவாக்கங்கள் நன்கு ஏற்றுக்கொண்ட கோட்பாடுகளுக்கும் சட்டத்திற்கும் இயைபானதென்பதை, பாதுகாக்கும் எண்ணத்துடன் பாராளுமன்றம் அல்லாத வேறு சபைகளால் துணைச் சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தை அமுல்படுத்துவதை நிரந்தரமாக மீளாய்வு செய்தல்.
- வழக்காடுதல் சம்பந்தப்பட்ட நிருவாகத் தன்மையின் நடவடிக்கை முறை உட்பட சட்ட நடவடிக்கை முறைகளை பகுத்தறிவு செய்தல் மற்றும் இலகுபடுத்துவதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை முறையாகத் தயார் செய்தல்.
- சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகியமொழிகளில் சட்டத்தை குறியீடுசெய்வதற்கு நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்தல்.
செயலாளர்
இலங்கையின் சட்ட ஆணைக்குழு
4 வது மாடி,
நீதி அமைச்சின் புதிய கட்டிடம்
இல 80, அதிகரன மாவத்தை,
கொழும்பு 12.
+94 112 333 884
+94 112 333 884
இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
இலங்கை நீதிமுறைமையில் அதியுயர்ந்த நீதிமன்றம் உயர்நீதிமன்றமாகும். அதிமேதகு சனாதிபதி அவர்களால் நியமிக்கப்படும் கௌரவ பிரதம நீதியரசர் உட்பட 11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் கிடைக்கப்பெறும் எல்லா விண்ணப்பங்களையும் விசாரிக்கின்றனர்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் மூலம் உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் பின்வருமாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:-
- அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய நியாயாதிக்கம்
- அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கம்
- இறுதி மேன்முறையிட்டு நியாயாதிக்கம்
- மதியுரை நியாயாதிக்கம்
- தேர்தல்கள் மனுக்கள் (சனாதிபதி தேர்தல்) பற்றிய நியாயாதிக்கம்
- எந்தவகையினதும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறல் பற்றிய நியாயாதிக்கம்
- பாராளுமன்ற சட்டத்தால் விதிக்கக்கூடிய பிற விடயங்கள் பற்றிய நியாயாதிக்கம்
உயர் நீதிமன்றம் அதன் செயல்பாடுகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் உதவுகிறது. இதற்கான நிதியை நீதி அமைச்சு செலவினத்தலைப்பு 234 இன் மூலம் வழங்குகிறது. உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் பணிகளாவன:
- உயர் நீதிமன்றப் பதிவுகளைப் பராமரித்தல்.
- அமர்வுகள் மற்றும் விண்ணப்ப அட்டவணைகளை ஒழுங்கு செய்தல்.
- நீதிமன்ற உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் பதிவு செய்தல்.
- உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளை அனுமதித்தல்
- மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து பெறப்படும் வழக்கேடுகளைத் தயாரித்தலும் சட்ட செலவுகளை மதிப்பீடு செய்தலும்.
திருமதி. எம்.எம். ஜயசேகர,
சட்ட வழக்கறிஞர்
+94 112 435 446
உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
நோக்கு
நியாயமான சட்டத்தை மதிக்கின்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.
செயற்பணிகள்
நீதிமன்றங்கள், சட்டத்தை அமுல்படுத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சட்ட மருத்துவ, மற்றும் உணவு விஞ்ஞானம் பற்றிய பகுப்பாய்வு, அறிவுரை மற்றும் மதியுரை சேவைகளை வழங்குதல்.
செயற்பாடுகள்
இலங்கையிலுள்ள ஒரேயொரு சட்ட ஆய்வுகூடமான அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் உணவு விஞ்ஞானப்பிரிவு, தடயவியல் விஞ்ஞானப்பிரிவு ஆகிய இரு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. உணவு விஞ்ஞானப் பிரிவானது உணவு, மதுபானம், பால் மற்றும் நீர் ஆகிய நான்கு ஆய்வுகூடங்களை உள்ளடக்கியுள்ளது. தடயவியல் விஞ்ஞானப் பிரிவானது எறிபடை தடயவியல் பிரிவு, நீர்ப்பாய தடயவியல் மற்றும் DNA பிரிவு, நச்சு தடயவியல் பிரிவு, வெடிபொருட்கள் மற்றும் தீ புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடயவியல் பிரிவு, சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் தடயவியல் பிரிவு, மற்றும் நானாவித தடயவியல் பிரிவு ஆகிய ஏழு துறைகளைக் கொண்ட 11 உப பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் விஞ்ஞான சேவைகள் வழங்குவதன் மூலம் இது சேவை வழங்கும் ஒரு திணைக்களமாவதுடன் நீதிமன்றங்கள், பொலிஸ், சுங்கத் திணைக்களம், மதுவரி திணைக்களம், துறைமுகங்கள், உள்ளுராட்சி நிறுவனங்கள், சுகாதாரம், பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் இருந்துபெறப்படும் சான்றுப் பொருட்களை விஞ்ஞான பரிசோதனை மற்றும் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கைகளை வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக பல்வேறு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்க அனுசரணை பெறுகின்ற நிறுவனங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற உணவுகள், மதுபானங்கள், பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு அலுவல்களுக்காக பரிசோதனை செய்யப்படுவதுடன் இலங்கை சுங்கத்தால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற மாதிரிகள் தரம் மற்றும் சுங்கவரி வகைப்படுத்தலுக்காக பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும் நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற சந்தேகத்திற்குரிய ஆவணங்களை பரிசோதனை செய்து அறிக்கையிடுதலும் இத் திணைக்களத்தின் மூலம் செய்யப்படுகின்றது.
பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்படும் சான்றுப் பொருட்கள் அல்லது மாதிரிகள், உணவு மற்றும் மருந்துகள் சட்டம், தேசிய சுற்றாடல் சட்டம், மதுவரிக் கட்டளைச் சட்டம், புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகாரசபை சட்டம், ஒப்பனைப் பொருட்கள் அவுடதங்கள் மற்றும் சாதனங்கள் சட்டம், பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம், சுடுகலன் கட்டளைச் சட்டம், விசம், அபின் மற்றும் அபாயகர ஒளடத சட்டம், வெடிபொருள் சட்டம், தீங்கு விளைவிக்கும் ஆயத சட்டம், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, சான்றுகள் கட்டளைச்சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டங்களின் கீழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை வழங்குதல் இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு பெறுகின்ற நிறுவனங்களிற்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விஞ்ஞான மதியுரைஞராகவும் இத்திணைக்களம் செயலாற்றுகிறது. விசேஷமாக, இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு தரத்தை உருவாக்குவதில் இந்நிபுணர்களின் பங்களிப்பு முக்கயமானதாகும். இந்நிபுணர்கள் பாதுகாப்பு அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க உதவிபுரிகின்றனர்.
இத் திணைக்களம் 2013 மே மாதம் முதல் பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடமொன்றிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் டீ.என்.ஏ. ஆய்வுகூடமென்று தேவையான எல்லா உபகரணங்களுடனும் இவ்வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திணைக்களம் குருநாகலில் மாகாண ஆய்வுகூடமொன்றை நிறுவியுள்ளது.
இல 31, இசுறு மாவத்தை,
பெலவத்த,
பத்தரமுல்ல.
+94 112 176 800 / +94 112 786 395
+94 112 786 394
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக







