பொறியியல் துறை
வினைத்திறன்மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான நீதியை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத் துறைக்கு தேவையான வசதிகளை வழங்குவது இந்த அமைச்சுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதொரு பிரதான பொறுப்பாகும். இதன் நிமித்தம் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், காணப்படும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்தல் ஆகியன பொறியியல் துறையின் முக்கிய பணிகளாகும்.
இதன் கீழ் புதிய நீதிமன்ற தொகுதிகள் மற்றும் கட்டடங்களை நிர்மாணித்தல், நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல், புனரமைத்தல் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய ஏராளமான முக்கிய பணிகள் இத்துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
அ) அமைச்சினால் முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்கள் முக்கியமாக பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது,
- பாரிய நிர்மாண கருத்திட்டங்கள்
- சிறிய கருத்திட்டங்களுக்காக வழங்கப்படும் நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் நிர்மாண கருத்திட்டங்கள்
- வரவு – செலவு மதிப்பீட்டின் மூலம் புனரமைப்பு செலவுத் தலைப்பின் கீழ் வழங்கப்படும் நிதி ஏற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு கருத்திட்டங்கள்
- உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மூன்று வருட திட்டத்தின் கீழ் வரவு – செலவு மதிப்பீட்டின் கீழ் வழங்கப்படும் நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் நிர்மாண கருத்திட்டங்கள்
- “அதிகரண பியச” கருத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நிர்மாண கருத்திட்டங்கள்
(ஆ) இந்த வருடத்திற்கான கருத்திட்ட சுருக்கம் பின்வருமாறு.
உள்நாட்டு நிதி ஏற்பாடுகளின் கீழ்
| திட்டம் | 2025வீதான திருத்தப்பட்ட நிதி ஏற்பாடு (ரூ.மி.) | 2025.12.31ஆம் திகதியிலான செலவு (ரூ.மி.) | நிதி முன்னேற்றம் % |
| பாரிய கருத்திட்டங்கள் | 2,009 | 635 | 31.64% |
| சிறிய நிர்மாண கருத்திட்டங்கள் | 400 | 65 | 16.35% |
| புனரமைப்பு கருத்திட்டங்கள் | 1,500 | 586 | 39.12% |
| செலவுத் தலைப்பு 228 - மூன்று வருட திட்டம் | 390 | 166 | 42.56% |
| செலவுத் தலைப்பு 110 - அதிகரண பியச நீதிவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி |
1,618 | 1,616 | 99% |
| நீதி அமைச்சின் கட்டிடத்தை நிர்மாணித்தல் | 973 | 703 | 72.30% |
| மொத்தம் | 6,890 | 3,773 | 54.77% |
வெளிநாட்டு நிதி ஏற்பாடுகளின் கீழ்

| திட்டம் | 2025ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதி ஏற்பாடுகள் (ரூ.மி) | 2025.12.31ஆம் திகதியிலான செலவு (ரூ.மி.) | 2025ஆம் ஆண்டிலான நிதி முன்னேற்றம் % | குறிப்பு |
| உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி கருத்திட்டம் | 260 30 (வரி செலுத்துவதற்காக) |
செலவு அறிக்கையிடப்படவில்லை | அறிக்கையிடப்படவில்லை | கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. |
2025.01.01 முதல் 2025.12.31ஆம் திகதி வரை நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்கள்
| கருத்திட்டம் | மதிப்பீட்டுத் தொகை (ரூ.மி.) பெறுமதிசேர் வரியுடன் | 2025ஆம் ஆண்டிலான செலவு (ரூ.மி.) | குறிப்பு |
| வாகறையில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 72.00 | 16.27 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.56.9 |
| நிக்கவரடிய நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 170.20 | 11 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.177 |
| புத்தளம் நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 238.86 | 41.52 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.226 |
| சம்மாந்துறை நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 69.10 | 6.20 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.66.54 |
| வாழைச்சேனை நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 331.22 | 11 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.321 |
| மணம்பிட்டிய நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 75.84 | 15.65 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.55.89 |
| குச்சவெலி நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 117.63 | 47.16 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.94 |
| மட்டக்களப்பு நீதிபதிகளுக்கான இரு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல் | 36.78 | 12.90 | செலவிடப்பட்டுள்ள தொகை - ரூ.மி.58.51 |
கடந்த ஐந்து வருட காலப்பகுதியினுள் (2021-2025) பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்கள்
- இரத்தினபுரி நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்.
- வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்.
- கம்பளை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்.
- கம்பளை நீதிமன்ற நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை அமைத்தல்.
- தெல்தெனிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்.
- வலஸ்முல்ல புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்.
- கட்டகஸ்திகிலிய சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தை நிர்மாணித்தல்.
- மெதவச்சிய சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தை நிர்மாணித்தல்.
- நாரம்மல சுற்றுலா நீதிமன்றத்துக்கான அலுவலக கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- மட்டக்களப்பு நீதிபதிகளுக்கான இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல்.
- குருநாகலில் இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல்.
- பதுளை நீதிவான் நீதிமன்றத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அலுவலகத்தின் எஞ்சிய பணிகளை சமுதாயச்சார் சீர்திருத்த அலுவலகம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓய்வறையை நிர்மாணித்தல்.
- நாவுல நீதிவான் நீதிமன்ற உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணித்தல்.
- சிலாபம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- வாழைச்சேனை மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தின் எல்லை மதிலை அமைத்தல்.
2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் கருத்திட்டங்கள்
- நீதிவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல். (புதிய விடயப்பரப்பு) – கொழும்பு 12
- இலங்கை உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் விரிவான புனரமைப்பு கருத்திட்டம்
- காலி நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் - கட்டம் II
- மாத்தளை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்
- பூகோடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்
- கந்தளை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்
- அம்பிலிப்பிட்டி இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களின் எஞ்சிய நிர்மாண பணிகளை பூர்த்தி செய்தல்
- பாணந்துறை இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களின் எஞ்சிய நிர்மாண பணிகளை பூர்த்தி செய்தல்
- குச்சவெலி நீதிமன்றத்தின் தடுப்பு சுவர், கேட் மற்றும் பாதுகாப்பு காவல் கூடத்தை நிர்மாணித்தல்
- தம்புள்ள நீதிமன்றத்தின் எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்தல்
2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு -2022 – 2023 சவால்மிக்க பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் இரு தரப்பினரதும் அந்நியோந்நிய ஒத்துழைப்புடன் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்கள்
| கருத்திட்டம் | கருத்திட்ட காலம் | ஒப்பந்த நிதி - வரியுடன் (ரூ.மி) | 2024.12.31ஆம் திகதியிலான திரண்ட நிதி – வரியுடன் (ரூ.மி) | 2025ஆம் ஆண்டுக்காக திருத்தப்பட்ட நிதி ஏற்பாடு (ரூ.மி.) | 2025.12.31 வரையான செலவு – வரியுடன் (ரூ.மி) | நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட திகதியிலான திரண்ட நிதி முன்னேற்றம் % | நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட திகதியிலான திரண்ட பெளதிக முன்னேற்றம் % |
| வலப்பனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் | 2022-2024 | 320 | 99.43 | 200 | 19.50 | 23% | 7.7% |
| பாணந்துறை இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல் | 2021-2023 | 34.56 | 18 | 0.00 | 0.00 | 52% | 60% |
| ஹெல்பொட நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2020-2023 | 51.2 | 43.21 | 0.00 | 0.00 | 84% | 80% |
| கல்முனையில் இரு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல் | 2022 | 37.5 | 10.00 | 0.00 | 0.00 | 28% | 10% |
| மூதூர் உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணித்தல் | 2021-2022 | 16.8 | 0.58 | 0.0 | 0.00 | 3% | 0% |
| சிலாபம் இரு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல் | 2020-2024 | 31 | 19.21 | 10.00 | 0.00 | 62% | 62% |
| மஹவ மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2022-2023 | 35.07 | 27.10 | 0.00 | 0.00 | 68% | 60% |
| தம்புள்ள நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2021-2022 | 60.90 | 8.90 | 0.00 | 0.00 | 15% | 20% |
| வரக்காப்பொல மாவட்ட நீதிமன்ற புதிய கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2022 | 80.61 | 1.09 | 0.00 | 0.00 | 1% | 1% |
| குளியாப்பிட்டி நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | - | 71.30 | 0.89 | 0.00 | 0.00 | 1% | 1% |
| கிண்ணியா நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | - | 95 | 1.00 | 0.00 | 0.00 | 0% | 0% |
| தெஹியத்தகண்டிய மாவட்ட நீதிமன்றத்துக்கான கட்டடமொன்றை நிர்மாணித்தல் | 2022-2023 | 74.5 | 7.90 | 0.00 | 0.00 | 27% | 8% |
| நொச்சியாகம அலுவலகம் மற்றும் சுவடிக்கூட கட்டிடத்தை நிர்மாணித்தல் | - | 34.77 | 0.46 | 0.00 | 0.00 | 1% | 1% |
| கல்பிட்டி நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | - | 58.01 | 2.22 | 0.0 | 0.00 | 4% | 0% |
| மொணராகலை நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2022-2023 | 101.2 | 21.92 | 0.0 | 0.00 | 21% | 40% |
| பக்க்மூண அலுவலகம் மற்றும் சுவடிக்கூட கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2022 | 33.86 | 4.41 | 0.0 | 0.00 | 13% | 10% |
| பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தின் சுவடிக்கூடம் மற்றும் வழக்குப் பொருள்களை வைப்பதற்கான அறையை நிர்மாணித்தல் | 2021-2023 | 32.9 | 16.64 | 0.0 | 0.00 | 50% | 50% |
| வல்லவாய புதிய நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2021-2022 | 58.8 | 16.17 | 0.0 | 0.00 | 27% | 35% |
| ஹிங்குரங்கொட மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2021-2022 | 104.4 | 17.57 | 0.00 | 0.43 | 17% | 10% |
| சிலாபம் மேலதிக நீதிவான் கட்டிடத்தை நிர்மாணித்தல் | - | 82 | 1.64 | 0.00 | 0.00 | 2% | 0% |
| மாரவில மேலதிக நீதிவான் நீதிமன்றத்தை நிர்மாணித்தல் | - | 101.8 | 3.00 | 0.00 | 0.00 | 3% | 0% |
| கெக்கிராவ மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தை நிர்மாணித்தல் | 2022-2023 | 112 | 27.65 | 0.00 | 0.00 | 25% | 12% |
| கலவான சுற்றுலா நீதிவான் நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல் | 2022 | 34.66 | 8.33 | 0.00 | 0.19 | 25% | 20% |
| மொத்தம் | - | 1,662.84 | 361.52 | 210.00 | 20.12 | - | - |
எதிர்கால திட்டங்கள்
2022-2023ஆம் ஆண்டுகளில் நாட்டில் நிலவிய சவால்மிக்க பொருளாதார நிலைமைகளின் மத்தியில் தேசிய வரவு – செலவு சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் பிரகாரம், பல கருத்திட்டங்கள் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கருத்திட்டங்களில் முக்கிய முன்னுரிமை காணப்படும் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, 2026ஆம் ஆண்டு வரவு – செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பரஸ்பர இணக்கப்பாட்டுடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பின்வரும் கருத்திட்டங்களை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- வலப்பனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல்.
- ஹெல்பொட நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- மஹவ மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- மொணராகலை நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- கலவான சுற்றுலா நீதிவான் நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- கல்முனை இரு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல்.
- மூதூர் உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணித்தல்.
- சிலாபம் இரு உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்தல்.
- குளியாப்பிட்டி நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- கிண்ணியா நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- தெஹியத்தகண்டிய மாவட்ட நீதிமன்றத்துக்கான கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- நொச்சியாகம அலுவலகம் மற்றும் சுவடிக்கூட கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- கல்பிட்டி நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- பக்க்மூண அலுவலகம் மற்றும் சுவடிக்கூட கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தின் சுவடிக்கூடம் மற்றும் வழக்குப் பொருள்களை வைப்பதற்கான அறையை நிர்மாணித்தல்.
- வல்லவாய புதிய நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- ஹிங்குரங்கொட மாவட்ட / நீதிவான் நீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணித்தல்.
- சிலாபம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தை நிர்மாணித்தல்.
- மாரவில மேலதிக நீதிவான் நீதிமன்றத்தை நிர்மாணித்தல்.
- கெக்கிராவ மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தை நிர்மாணித்தல்.
ஆலோசனை சேவைகள் கருத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களும், நிலவிய சவால்மிக்க பொருளாதார நிலைமைகள் காரணமாக திட்டமிடல் கட்டத்திலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதில் கடுவலை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை 2026ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்காக நிதி ஏற்பாடுகள் வரவு – செலவு மதிப்பீட்டில் கிடைக்கப்பெற்றுள்ளது.
- மத்துகம நீதிமன்றத்துக்கான புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- அவிசாவளை நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- ஹொரண நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- ஹட்டன் மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- நுவரெலியா மாவட்ட நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- கல்கிஸ்ஸ நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- கண்டி நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- மாவனல்ல மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- பஸ்ஸரை நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- பெல்மதுல்ல நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- கேகாலை நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- அத்தநகல்ல நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- மினுவங்கொட நீதிமன்றத்துக்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்.
- திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல்.
- களுத்துறை நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல்.
மேலும், துரித தேவைகள் காணப்படும் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான புதிய பல கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்திட்டங்கள் பின்வருமாறு.
- மொரவக்க நீதிமன்றத்தின் தடுப்பு சுவரை நிர்மாணித்தல்.
- நீர்கொழும்பு நீதிமன்றத்தின் கூரையின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- நுவரெலியா மாவட்ட நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- கேகாலை நீதிமன்றத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- யாழ்ப்பாண நீதிமன்றத்தின் கூரையின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- மன்னார் நீதிமன்றத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- ஹோமாகம நீதிமன்றத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- அவிசாவளை நீதிமன்றத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- இரத்தினபுரி நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- தெல்தெனிய நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- அக்கரைப்பற்று நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- குருநாகல் நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- பதுளை மாவட்ட நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- கம்பஹா நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- அவிசாவளை மாவட்ட நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- குளியாப்பிட்டிய நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- மாவத்தகொட சுற்றுலா பங்களாவின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- வாரியபொல நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- மணம்பிட்டிய நீதிமன்றத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
Contact Details
| Name | Designation | Mobile | Office | |
| Eng.B.S.C. Munasingha | Director(Engineering)-Construction | 071-5341873 | 011-2331536 | |
| Eng.N.K Wickramarathna | Director(Engineering)-Maintenance | 077-7705330 | 0112322924 | |
| Eng.T.Sanjeewan | Engineer | 077-3478451 | 011-2445518 | |
| Eng.R.M.P.D Rathnayaka | Engineer | 071-2248664 | 0112478338 | |
| Eng.P.H.N Jayarathna | Engineer | 076-9273425 | 0112435208 |






