சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் – உள்நாட்டு மொழிகள்

தகைமைகள்
  • நீதி அமைச்சினால் நடாத்தப்படும் எழுத்து மூலமான பரீட்சையில் சித்தியடைதல்.
விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான நடைமுறைகள்
    • விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதானது நிகழ்நிலை (Online) முறையூடாக மாத்திரம் இருப்பதுடன் அதனுடன் தொடர்புடைய இணைப்பானது (Link) தகவலின் இறுதியில் காட்டப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் சரியானதாக பூரணப்படுத்தப்படுவதுடன் மேலும் விவரங்களை வழங்குவதற்காக தங்களது மின்னஞ்சல் முகவரி (email) மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றினையும் சரியானதாக குறிப்பிடப்படல் வேண்டும்.
    • பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டின் மூலப்பிரதியை சரியான முறையில் பதிவேற்றம் (Upload) செய்தல் வேண்டும்.
    • வினாப்பத்திரங்கள் பின்வரும் வகையில் தயாரிக்கப்படுவதுடன் பரீட்சையில் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்களை எதிர்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொருத்தமான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க முடியும்.

      சிங்களம்/ ஆங்கிலம்
      சிங்களம்/ தமிழ்
      தமிழ்/ ஆங்கிலம்

  • வருடம் முழுவதும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் ஆகஸ்ட் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கான பரீட்சை அவ்வருடத்திலேயே நடாத்தப்படும்.
  • பரீட்சை நடாத்தப்படும் தினத்திற்கு முன்னர் பரீட்சை அனுமதி இவ்வலைத்தளதினூடாக (Web) விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்
பரீட்சைக் கட்டணம்
    • உள்நாட்டு மொழிகளுக்கான பரீட்சைக் கட்டணம் பின்வருமாறு அமையும்.

      சிங்களம்/ ஆங்கிலம் - ரூபா. 1000.00
      சிங்களம்/ தமிழ் - ரூபா. 1000.00
      தமிழ்/ ஆங்கிலம் - ரூபா. 1000.00

  • பரீட்சைக் கட்டணம் செயலாளர், நீதி அமைச்சு என்ற பெயரில் மக்கள் வங்கியின் மத்திய நகர கிளையில் இருக்கின்ற 176-1-001-9-9025184 எனும் கணக்கிலக்கத்திற்கு வரவு வைத்து அப்பற்றுச்சீட்டின் மூலப் பிரதியை சரியாக பதிவேற்றம் (Upload) செய்தல் வேண்டும்.
தெரிவு செய்தல் மற்றும் நியமித்தலுக்கான செயல் நடைமுறைகள்
  • மேற்குறிப்பிடப்பட்ட பரீட்சையினை சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் தான் வசிக்கும் பிரதேசத்தில் மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களாக நியமிக்கப்படுவர்.
  • தகைமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நியமனம் பெறுவதற்கு தகைமை பெறுவதாக பரிந்துரை செய்யும் கடிதம் உள்ளடங்கலாக அவ்விண்ணப்பதாரரின் வதிவிடத்தின் மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு அனுப்பப்படுவதுடன் அதன் பிரதியொன்று விண்ணப்பதாரருக்கும் அனுப்பப்படும்.
  • அந்நியமனக் கடிதம் பெற்றுக்கொண்டதன் பின் தகைமை பெற்ற சகல விண்ணப்பதாரர்களும் மாவட்ட நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரிடம் அதற்கான திகதியொன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • மாவட்ட நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சகல மொழிபெயர்ப்பாளர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட உடனே சத்தியப்பிரமாணம் அல்லது சான்றிதழுடன் நியமனக் கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்றினை நீதி அமைச்சுக்கு அனுப்ப வேண்டும்.
Apply Online

சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் - வெளிநாட்டு மொழிகள்

தகைமைகள்
  • நீதி அமைச்சினால் நடாத்தப்படும் எழுத்துப் பரீட்சையொன்று அல்லது தகைமைகளை மதிப்பிடும் பரீட்சையொன்றில் சித்தியடைதல்.
விண்ணப்பங்களை சமர்பிக்கும் நடைமுறைகள்
  • விண்ணப்பங்கள் சமர்பித்தலானது நிகழ்நிலை (Online) முறையூடாக மட்டும் செய்தல் வேண்டும்.
  • கூகுல் படிவம் (Google form) சரியாகப் பூரணப்படுத்தப்பட வேண்டியதுடன் மேலும் விவரங்களை வழங்குவதற்காக தங்களது மின்னஞ்சல் முகவரி (email) மற்றும் தொலைபேசி இலக்கத்தினையும் சரியானதாக குறிப்பிடப்படல் வேண்டும்.
  • பரீட்சைக் கட்டணம் பற்றி பின்பு அறியத்தரப்படும்.
  • வருடம் முழுவதும் விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுவதுடன் ஆகஸ்ட் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கான பரீட்சை செப்தெம்பர் மாதத்தில் நடாத்தப்படும்.
  • பரீட்சை நடாத்தப்படும் தினத்திற்கு முன்னர் பரீட்சை அனுமதி இவ்வலைத் தளத்தினூடாக (web) விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.
பரீட்சைக் கட்டணம்
  • பரீட்சைக் கட்டணம் தொடர்பாக தங்களது மின்னஞ்சலூடாக (email) மட்டுமே அறிவிக்கப்படும்.
தெரிவுசெய்தல் மற்றும் நியமித்தலுக்கான செயல் நடைமுறைகள்
  • மேற்குறிப்பிடப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் தான் வசிக்கும் பிரதேசத்தின் மாவட்ட நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களாக நியமிக்கப்படுவர்
  • தகைமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நியமனம் பெறுவதற்கு தகைமை பெறுவதாக பரிந்துரை செய்யும் கடிதம் உள்ளடங்கலாக அவ்விண்ணப்பதாரரின் வதிவிடத்தின் மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு அனுப்பப்படுவதுடன் அதன் பிரதியொன்று விண்ணப்பதாரருக்கும் அனுப்பப்படும்.
  • அந்நியமனக் கடிதம் பெற்றுக்கொண்டதன் பின் தகைமை பெற்ற சகல விண்ணப்பதாரர்களும் மாவட்ட நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரிடம் அதற்கான திகதியொன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • மாவட்ட நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சகல மொழிபெயர்ப்பாளர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட உடனே சத்தியப்பிரமாண சான்றிதழுடன் நியமனக் கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்றினை நீதி அமைச்சுக்கு அனுப்ப வேண்டும்.
Apply Online

கடந்தகால பரீட்சை வினாப்பத்திரங்கள்

சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களுடைய பெயர்ப்பட்டியலை புதுப்பித்தல் (Update) மற்றும் அதனுடன் தொடர்புடைய பதவி முத்திரையைத் தயாரிப்பதற்கான ஆலோசனைகள்.

  • சத்தியப் பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் பரீட்சையில் சித்தியடைந்த தாங்களுடன் தொடர்புடையதான அதிகார எல்லையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து, அது பற்றி எமது அமைச்சு அறிந்துகொண்டதன் பின்னர் அமைச்சின் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களுடைய பெயர்ப்பட்டியலில் தங்களது பெயரும் உள்ளடக்கப்படும்.
  • மேலும் தங்களால் எதிர்காலத்தில் மொழிபெயர்க்கப்படும். ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பதவி முத்திரையை தயாரிக்கின்ற போது பின்வரும் விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்./li>
  • அதன்படி தங்களது பதவி முத்திரையில்‚
    (i) பெயர்,
    (ii) பதவி,
    (iii) பதிவிலக்கம்,
    (iv) சத்தியப்பிரமாணம் செய்த மொழிகள்,
    (v) முகவரி மற்றும்,
    (vi)தொலைபேசி இலக்கம்/ இலக்கங்கள் குறிப்பிடப்படல் வேண்டும்.
  • மேலும் தங்களது கையொப்பத்துடன் கூடிய பின்வரும் ஆவணத்தை எமது அமைச்சிற்கு அனுப்புதல் வேண்டும் (PDF).
கையொப்பபடிவம்

(கவனிக்குக - தயவுசெய்து தங்களுடைய கையொப்பம் மற்றும் பதவி முத்திரையை இணைப்பதற்கு முன்னர் அதில் தங்களுடைய அடையாள அட்டை இலக்கமிடப்பட்டு மீண்டும் பெயரிடவும்.)

Form in case of the Sworn Translators who have been appointed before 15.01.2022

Form in case the Sworn Translators who have been appointed after 15.01.2022

பதவி முத்திரைக்கான மாதிரிப்படம்
sample-seal

Contact Details

தயவு செய்து மேலதிக விவரங்களுக்காக 0112 446 185 எனும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும்

List of Sworn Translators in Sri Lanka 

சிறப்பு அறிவிப்பு